Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

#டாஸ்மாக்: ON DUTY மது (வாங்க) அவசரம்!…ஸ்டிக்கரால் அதிர்ந்த போலீஸ்!

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால்  40 நாட்களாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று டாஸ்மாக் திறக்கப்பட்டதை தொடர்ந்து மது பிரியர்கள் நீண்ட வரிசையில்  நின்று, பல மணி நேரம் காத்திருந்து சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்டு மதுபாட்டில்களை வாங்கிச் சென்றார்கள்.

மதுக்கடை திறந்ததில் இருந்து ஒரு பக்கம் வன்முறைகள் அதிகரித்தாலும்  மறுபுறம் அவர்களின் சேட்டைகள்  மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. அதுபோல நாகர்கோவில் செட்டிக்குளம் பகுதியில்  குடிமகன் ஒருவர் On Duty மது வாங்க அவசரம் என்று  எழுதி பைக் முன்பு போர்ட் மாட்டிவந்துள்ளார். இந்த ஸ்டிக்கரை பார்த்து அதிர்ந்த போலீஸார், அவரை தடுத்து நிறுத்தி முன் பக்கம் ஒட்டியிருந்த அந்த ஸ்டிக்கரை கிழித்து பின்பு  அனுப்பி வைத்தனர்.

Categories

Tech |