மேஷ ராசி அன்பர்களே …! இன்று நீங்கள் விலை உயர்ந்த ஆபரணங்களை கையாளும் பொழுது ரொம்ப கவனமாக கையாள வேண்டும். இன்று உங்களுக்கு சந்திராஸ்டமம் உள்ளதால் கொஞ்சம் அனைவரையும் அனுசரித்துச் செல்லுங்கள். தாயாரை ஆதரித்து பேசுங்கள். சோர்வு நீங்கி ஓரளவு துடிப்புடன் செயல்படுவீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள்.
உத்தியோகத்தில் மட்டும் புதிய முடிவுகள் எதுவும் எடுக்கவேண்டாம். சக ஊழியர்களிடம் அன்பாகவே நடந்துகொள்ளுங்கள். தன்னம்பிக்கை துளிர்விடும். எதிர்பாராத சில தடைகள் உண்டாகலாம். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரிய வெற்றியும் அடைவீர்கள். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள் ஓரளவு சரியாகும். மன அழுத்தம் அவ்வப்போது வந்து சொல்லும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு இருக்கும்.
இன்று கவனமாக செயல்படுவது நன்மையை கொடுக்கும். கூடுமானவரை உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்புடன் இருக்கலாம்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிசய எண்கள்: 6 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்.