Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

ரெடியா இருங்க…! ”கொஞ்ச நேரத்துல வந்துரும்” விட்டுற கூடாது …!!

டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்வது உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் சென்னை தவிர மற்ற இடங்களில் நேற்றும், இன்றும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. டாஸ்மாக் மதுக்  கடைகள் திறப்பதால் பல்வேறு விதமான பின்விளைவுகள் நேரிடுகின்றது என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த உயர் நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது. அந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய திட்டமிட்டிருக்கிறது.

டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கின்றது. வழக்கறிஞர்கள் தயார் நிலையில் வைக்க சொல்லி தமிழக அரசு சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தான் முதற்கட்டமாக சொல்லப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் சென்னை உயர்நீதிமன்றம் இந்த டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்ற இந்த உத்தரவில் நகல்கள் இன்னும் கிடைக்காமல் இருக்கிறது. அந்த உத்தரவு நகல் வந்ததும் உடனடியாக மேல்முறையீடு   செய்யும் பணிகள் நடைபெறும் என்று சொல்லப்படுகின்றது.

Categories

Tech |