Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க முயன்றவர் பலி!

சென்னை தியாகராய நகரில் வசித்து வந்தவர் பெருங்குடி சிவனேசன். இவர்  27 வருடங்களாக பயோ டெக் என்ற  நிறுவனம் ஒன்றை  நடத்தி வந்தார். மேலும் சளி, இருமல் உள்ளிட்ட பல்வேறு மருந்து கண்டுபிடிப்பிலும் முக்கிய பங்கு வகித்து வந்துள்ளார்.

கொடிய கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் அதற்கான மருந்தை கண்டுபிடிக்க தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார். சோடியம் நைட்ரேட் மூலம் நைட்ரிக் ஆக்சைடு தயாரித்தால் கொரோனா நோயை கட்டுப்படுத்தும் என நினைத்த அவர் அதற்கான முயற்சியில் ஈடுபட்டார். அப்போது பரிசோதனை செய்வதற்காக  சோடியம் நைட்ரேட் கரைசலையும் சிவனேசன் குடித்துள்ளார். குடித்த சிறிது நேரத்திலேயே மயக்கமடைந்த அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால்  சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் உயிரிழந்தார்.

Categories

Tech |