கடக ராசி அன்பர்களே …! குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவது ரொம்ப நல்லது. மனதிற்கு இதமான செய்திகள் உருவாகும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சிந்தனை திறன் பெருகும் நாள்.
இன்று மனம் மகிழும் படியான சூழ்நிலை உருவாகும். வெளியூர் செல்ல வாய்ப்புகள் அமையும். பணிகள் மிக துரிதமாக நடைபெறுவதற்கான சூழல் உருவாகும். இன்று எதையும் கூடுதல் நேரம் ஒதுக்கி கவனத்துடன் காரியங்களை செய்வீர்கள். காதலர்களுக்கு இன்று இனிமையான நாளாகவே இருக்கும். அதே போலவே கணவன் மனைவிக்கு இடையே அன்பு நீடிக்கும். இன்று எந்த ஒரு விஷயத்தையும் திறம்பட செய்து பாராட்டுகளையும் பெறுவீர்கள்.
தனவரவு பொருத்தவரை எந்தவித பிரச்சனைகளும் இருக்காது ரொம்ப சுமுகமாகவே இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டால் மிகவும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பை ஏற்படுத்தும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்.