டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிட்டது தமிழக பெண்களுக்கும், மக்களுக்கும் கிடைத்த வெற்றி என்று தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகம் பாதித்த பகுதிகள் மற்றும் சென்னை மாவட்டம் தவிர்த்து பிற பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மது கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை அடுத்து நேற்றும், இன்றும் மது விற்பனை தமிழகத்தில் ஜோராக நடைபெற்றன. அதேநேரத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த வழிகாட்டல்கள் மது விற்பனையில் மீறப்பட்டதுள்ளதாக பல்வேறு விமர்சனகள் எழுந்தனர்.
இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் டாஸ்மாக் மதுக்கடைகளை ஊரடங்கு உத்தரவு முடியும் வரை திறக்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தயாராகி கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை வரவேற்று அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்தில், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளதை தேமுதிக வரவேற்கிறது. மதுக்கடைகள் திறக்கக்கூடாது என்று போராடிய தமிழக பெண்களுக்கும், மக்களுக்கும் கிடைத்த வெற்றி. தமிழகஅரசு உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்யகூடாது என்று பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளதை தேமுதிக வரவேற்கிறது.மதுக்கடைகள் திறக்கக்கூடாது என்று போராடிய தமிழக பெண்களுக்கும்,மக்களுக்கும் கிடைத்த வெற்றி. தமிழகஅரசு உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்யகூடாது.@CMOTamilNadu pic.twitter.com/1fzOMhg8UD
— Premallatha Vijayakant (@imPremallatha) May 8, 2020