Categories
அரசியல் மாநில செய்திகள்

எகிறி அடித்த கேப்டன்….! ”சரண்டர் ஆன தளபதி” ஆடிபோன கழகத்தினர் …!!

தமிழகத்தில் மதுக்கடைகளை அடைக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவுக்கு அரசியல் காட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்கலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு எதிராக நேற்று முன்தினம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் பல்வேறு நிபந்தனைகளை கடைபிடித்து மதுக் கடையைத் திறக்கலாம் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியது. குறிப்பாக சமூக விலகல் முறையாக பின்பற்ற வேண்டும் என்றும், டாஸ்மாக் மதுக்கடையில் 5 நபர்களுக்கு மேல் கூட்டம் கூட கூடாது என்று பல்வேறு நிபந்தனைகளை விதித்து இருந்தது. ஆனால் நேற்றும் இன்றும் நடைபெற்ற மது விற்பனையில் நீதிமன்ற உத்தரவுகள் காற்றில் பறக்கவிடப்பட்டன.

இதனை சுட்டிக்காட்டி இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிட்டது. மேலும் ஆன்லைன் மூலமாக வீட்டிற்கு சென்று டோர் டெலிவரி செய்ய அரசு வழிவகை செய்யுமாறு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுக்கு தமிழகத்திலுள்ள பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன், திமுக தலைவர் மு க ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் நீதிமன்ற உத்தரவுக்கு தங்களது கருத்துக்களை பதிவு செய்திருந்தார்கள்.

இந்த வழக்கை தொடர்ந்ததில் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வகியும் அடங்கி இருப்பதால் நீதிமன்ற உத்தரவுக்கு நடிகர் கமலஹாசன் முதல் ஆளாக வரவேற்பு தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து தமிழகத்தின் எதிர்க்கட்சியாக விளங்குகின்ற திமுக தனது கருத்தை தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தேமுதிக திமுகவை முந்திக்கொண்டு நீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்தது. தேமுதிக தனது கருத்தைத் தொடர்ந்து கிட்டத்தட்ட ஒரு மணி நேரங்கள் கழித்து தான் திமுக நீதிமன்ற உத்தரவுக்கு வரவேற்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

அனைவரிடமும் உள்ளதை உள்ளபடி படக் படக் என்று பேசும் விஜயகாந்த் நீதிமன்ற உத்தரவுக்கு தமிழகத்தின் எதிர்க்கட்சியாக இருக்கும் திமுகவை விட விரைவாக கருத்து  தெரிவித்தது சமூகவலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

தேமுதிக:

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளதை தேமுதிக வரவேற்கிறது. மதுக்கடைகள் திறக்கக்கூடாது என்று போராடிய தமிழக பெண்களுக்கும், மக்களுக்கும் கிடைத்த வெற்றி. தமிழகஅரசு உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்யகூடாது என்று விஜயகாந்த் தெரிவித்தார்.

மக்கள் நீதிமய்யம்:

டாஸ்மாக் கடையை மூட நீதிமன்றம் உத்தரவிட்டது தமிழ் தாய்மார்களின் குரலுக்கான வெற்றி. நீதிமன்றத்தின் மீது நம்பிக்கையும், சத்தியமே வெல்லும் என்று நிரூபித்து இருக்கிறது. இந்த உத்தரவு மக்கள் நீதி மையம் மட்டும் பெற்ற வெற்றி அல்ல தமிழகமே கொண்டாட வேண்டிய வெற்றி என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.

திமுக:

ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடையை மூடுவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டதை வரவேற்கிறோம். மக்களின் உயிர் நலன் மீது அக்கறை கொண்ட நீதிமன்றம் அளித்த உத்தரவை திமுக வரவேற்கிறது. உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யும் முயற்சிகளை அதிமுக அரசு கைவிட வேண்டும். மக்களின் உயிரை பணையம் வைக்காமல் ஊரடங்கு நீர்த்துப்போகச் செய்யாமல் உத்தரவை ஏற்க வேண்டும் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Categories

Tech |