Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப ராசிக்கு…மனஸ்தாபம் ஏற்படலாம்…பொறுமை தேவை …!

கும்ப ராசி அன்பர்களே …!    உறவினர், நண்பர்களை தயவுசெய்து பகைத்துக் கொள்ள வேண்டாம். பணம் நகைகளை கவனமாகக் கையாள வேண்டும். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை தயவு செய்து ஒப்படைக்க வேண்டாம். தாயின் உடல்நலத்தில் ரொம்ப கவனமாக இருங்கள். நண்பர்கள், உறவினர்கள் மூலம் சில உதவிகளும் கிடைக்கும். ஆனால் அவர்களை தயவு செய்து நீங்கள் பகைத்துக் கொள்ள வேண்டாம்.

தந்தையுடன் மனஸ்தாபம் ஏற்படலாம். எதிர்பாராத காரிய தடைகள் வரும். வாகனத்தில் செல்லும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வாகன பராமரிப்புச் செலவும் உண்டு. அதேபோல் கொடுக்கல் வாங்கலிலும் ரொம்ப கவனமாக தான் ஈடுபடவேண்டும். புதியதாக கடன்கள் ஏதும் நீங்கள் வாங்க வேண்டாம். எதையும் பொறுத்திருந்து பின்னர் செய்வது தான் மிகவும் சிறப்பு. முடிந்தால் இன்று இறை வழிபாட்டுடன் காரியங்கள்  செய்யுங்கள் மிக சிறப்பாக இருக்கும். மனதை அமைதியாக வைத்துக் கொள்வதற்கு ஈடுபடுதல் மிகவும் சிறப்பாக இருக்கும்.

கணவன் மனைவிக்கு இடையே ஓரளவு அன்பு  இருந்தாலும் அவர்களை மற்றும் கொஞ்சம் இதை உணர்ந்து  நடந்துகொள்ளவேண்டும். பேசும்பொழுது வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது போலவே இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறம்.

Categories

Tech |