Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மது பாட்டிலுக்குள் சைடிஸ்? குடிமகன்கள் திகைப்பு!

தமிழகத்தில் கடந்த 45 நாட்களாக பூட்டியிருந்த மதுக்கடை மே 7ஆம் தேதி அன்று திறக்கப்பட்டது. கடை திறந்ததில் இருந்து படு ஜோராக விற்பனை நடைபெற்றது. இந்த 2 நாட்களில் சுமார் 294 கோடிக்கு விற்பனையானது. மதுபிரியர்கள் வரிசையில் நின்று மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர்.

இந்நிலையில்தான் சீர்காழியில் டாஸ்மாக் கடையில் ஒருவர் வாங்கிய மது  பாட்டிலின் உள்ளே தவளை  மிதந்ததால் குடிமகன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  பின்பு அதற்கு பதிலாக  புது மதுபாட்டில்களை கடை  ஊழியர்கள்  வழங்கினார். மேலும் மதுபாட்டில்களை பரிசோதித்து வழங்க மேலாளர் ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

 

Categories

Tech |