தென்கொரியாவில் இருந்து 10 லட்சம் பிசிஆர் பரிசோதனை ஹிட்டுகளை தமிழக அரசு ஆர்டர் செய்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் கொரோனா எவ்வளவு பேருக்கு பரவி இருக்கிறது என்பதை கண்டறிவதற்கான பரிசோதனை தொடர்ச்சியாக அதிகரித்து கொண்டே வருகின்றது. இந்த சூழ்நிலையில் தற்போது தமிழ்நாடு பணியாளர் கழகம் சார்பில் 10 லட்சம் பிசிஆர் பரிசோதனை ஹிட்டுகள் ஆர்டர் செய்யப்பட்டு இருக்கிறது என்ற தகவல் கிடைத்திருக்கிறது.
பிசிஆர் பரிசோதனையை பொருத்தவரை தமிழகத்தில் கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் சித்து வருகின்றோம். ஆரம்பத்தில் 100 இலிருந்து 1000, 10,000 என தொடர்ச்சியாக அதிகளவில் செய்யப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் 3 லட்சத்து 20 ஆயிரம் பிசிஆர் பரிசோதனை கிட்டுகள் இருந்தன.தற்போது தமிழகத்தில் சராசரியாக 13 ஆயிரத்தில் இருந்து 15,000 பிசிஆர் பரிசோதனை வரை நடைபெறுகின்றது.
இதுவரை 2 லட்சத்து 16 ஆயிரத்து 416 பிசிஆர் பரிசோதனை கருவிகளை பயன்படுத்திய நிலையில் இன்னும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பரிசோதனைகள் நம்மிடம் இருப்பதால் தென் கொரியாவில் இருந்து மேலும் 10 லட்சம் பிசிஆர் பரிசோதனை கருவிகளை தமிழ்நாடு மருத்துவ பணியாளர் கழகம் ஆர்டர் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.