முதுகுவலி என்று மருத்துவமனை சென்றவருக்கு ஸ்கேனில் 3 கிட்னி இருப்பதை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
பிரேசில் நாட்டை சேர்ந்த 38 வயதான நபர் ஒருவர் மருத்துவமனைக்கு சென்று முதுகுவலி என மருத்துவரிடம் கூறியுள்ளார். எனவே மருத்துவர் அவரது உடலை ஸ்கேன் செய்து பார்த்துவிட்டு சாதாரண முதுகுவலி தான் வேறு எந்தப் பெரிய பாதிப்பும் இல்லை என கூறி உள்ளார். ஆனால் அவருக்கு எடுக்கப்பட்ட ஸ்கேன் ரிப்போர்டில் முதுகு வலி என வந்தவருக்கு மூன்று கிட்னி இருப்பதை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இடதுபுறம் ஒரு கிட்னியும் வலதுபுறம் இரண்டு கிட்னியும் அவருக்கு இருந்துள்ளது. இதுகுறித்து மருத்துவர்கள் தெரிவித்த பொழுது, நமது உடலில் இரண்டு கிட்னிகள் சிறிய குழாய் வழியாக சிறுநீரக பையை அடையும். ஆனால் அவருக்கு இருக்கும் 3 கிட்னிகளும் எந்த குழாய் வழியாகவும் இல்லாமல் நேராக சிறுநீரக பையில் சேர்ந்துள்ளது
அவருக்கு எந்த ஒரு பிரச்சினையும் இல்லாமல் அனைத்து உறுப்புகளும் நன்றாகவே செயல்பட்டு வருகின்றது. இது போன்ற நிகழ்வுகள் கரு வளர்ச்சியின் போது தான் நடக்கும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். முதுகு வலி காரணமாக மருத்துவமனைக்கு சென்ற நபருக்கு மூன்று கிட்னி இருப்பது தெரிய வந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.