டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுமாறு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது
சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மார்க் மதுக்கடைகளை முடியதற்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், சமூக இடைவெளி என்பதை கடைபிடிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும், சமூக இடைவெளி என்பது கடைப்பிடிக்கப்பட்டு இருப்பதாகவும், எதிர்காலத்திலும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சொல்லி இருக்கக்கூடிய அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் முறையாக கடைப்பிடிக்கவும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
அதே போல டஸ்மார்க் மதுக்கடை என்பது அரசின் கொள்கை முடிவு. இதில் நீதிமன்றம் தலையிட முடியாது. ஆன்லைனில் மது விற்பனை செய்வது என்பது தற்போது சாத்தியமில்லாத ஒன்று என்றும் எனவே சென்னை உய்ரநீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும், மதுக்கடைகளை திறக்க உத்தரவிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு செய்துள்ளது.