Categories
மாநில செய்திகள்

அப்படி செய்யாதீங்க….! ”விவசாயிகள் பாவம்” நாங்க உங்களை எதிர்ப்போம் …!!

மின்சார சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதல்வர் எட்டாப்படி பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய அரசு கடந்த ஏப்ரல் 17-ம் தேதியன்று வெளியிட்ட அறிவிப்பில்  2020 ஆம் ஆண்டு வரவிருக்கும் மின்சார சட்டத் திருத்தம் குறித்து அனைத்து மாநிலம்  மற்றும் பிற பங்குதாரர்களிடம் கருத்துக்கள் கேட்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்பை பதிவு செய்யும் என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

அந்த அடிப்படையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள மின்சார சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதத்தை எழுதியுள்ளார்.இந்த சட்டத்திருத்தம் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக அமையும் என்றும், இது மாநில அரசின் அதிகாரங்களை பறிக்கும் என்றும் தமிழக முதலமைச்சர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

விவசாயிகளுக்கு இலவசமாக மின்சாரத்தை மாநில அரசு வழங்கி வரும் நிலையில் மத்திய அரசு மின்சார வாரியத்தை தனியார் மயமாக்கினால் மாநில அரசின் முக்கியமான கொள்கையாக இருக்கும் இது போன்ற விஷயங்கள் எல்லாம் பாதிக்கப்படும்  என்றும் தமிழக முதல்வர் எட்டாப்படி பழனிசாமி அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |