உலகம் முழுவதும் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 லட்சத்தை தாண்டியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 லட்சத்து 27 ஆயிரத்து 068 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, பல்வேறு நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 76 ஆயிரத்து 386 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 13 லட்சத்து 93 ஆயிரத்து 507 பேர் குணமடைந்துள்ளனர். உலக நாடுகளில் அதிகபட்சமாக பாதிப்படைந்த நாடுகளின் விவரங்கள் பின்வருமாறு:
உலக நாடுகளில் பாதிப்புகளின் எண்ணிக்கை:
அமெரிக்கா – 13.22 லட்சம்,
ஸ்பெயின் – 2.60 லட்சம்,
இத்தாலி – 2.17 லட்சம்,
பிரிட்டன் – 2.11 லட்சம்,
ரஷ்யா – 1.98 லட்சம்.
பிரான்ஸ் – 1.76 லட்சம்,
ஜெர்மனி – 1.70 லட்சம்,
உலக நாடுகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை :
அமெரிக்கா – 78,616 பேர்,
பிரிட்டன் – 31,241 பேர்,
இத்தாலி – 30,201 பேர்,
ஸ்பெயின் – 26,299 பேர்
பிரான்ஸ் – 26,230 பேர்,
ஜெர்மனி – 7,510 பேர்,
ரஷ்யா – 1,827 பேர்.
உலக நாடுகளில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை:
அமெரிக்கா – 2.23 லட்சம்,
ஜெர்மனி – 1.43 லட்சம்,
ஸ்பெயின் – 1.68 லட்சம்,
இத்தாலி – 99,023 பேர்,
பிரான்ஸ் – 55,782 பேர்,
ரஷ்யா – 31,916 பேர்.