துத்தநாகம், சல்பேட், விட்டமின்கள் “ஏ”, “பி”, “சி” உள்ளிட்ட பல சத்துக்கள் கொண்ட சப்ஜா விதையின் நன்மைகள் பற்றிய சில குறிப்பு …!
சப்ஜா விதைகளில் நார்ச்சத்து வளமாக நிறைந்துள்ளதால் வயிற்று பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை அளிக்கும்.
மிகுந்த உடல் சூட்டினால் அவதிபடுபவர்கள் சப்ஜா விதைகளை இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் சாப்பிடுங்கள் முக்கியமாக நீர்க்கடுப்பு, உடல் சூடு பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் தினமும் கூட சாப்பிடலாம்.
பித்தத்தை குறைக்கும், ஜீரண பாதையில் ஏற்படும் புண்களை ஆற்றும், குடல் மற்றும் வயிற்றுப் புண்களை ஆற்றக் கூடியது.
மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் தினமும் விதைகளை நீரில் ஒரு மணி நேரம் ஊற வைத்து படுக்கும்முன் அதனை பாலுடன் சேர்த்து கலந்து குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.
சர்க்கரை நோயாளிகள் தினமும் ஒரு தேக்கரண்டி விதையை நீரில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தலாம்.
இதில் அதிக நார்ச்சத்து இருப்பதால் இதை சாப்பிடும் போது நீண்ட நேரம் பசியெடுக்காமல் இருக்கும். எனவே எடையை குறைக்க டயட்டில் இருக்கும் போது இந்த விதையை சேர்த்துக் கொள்வது சிறந்த பலனைத் தரும்.
பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதலுக்கு இது சிறந்த மருந்து. நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும்.
அதிகளவு இரும்புச்சத்து இருப்பதால் சப்ஜா விதைகளை இரவு தண்ணீரில் ஊற வைக்கவேண்டும். இதில் சிறிது நாட்டுச் சர்க்கரை அல்லது பனைவெல்லம் சேர்த்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ரத்த சோகை வராமல் தடுக்கலாம்.
ஒரு தேக்கரண்டி சப்ஜா விதையை 20 நிமிடங்கள் 100மி .லி நீரில் ஊற வைத்து எடுத்துக்கொள்ளுங்கள் இதனுடன் எலுமிச்சம்பழச்சாறு ஒரு டீஸ்பூன், பனங்கற்கண்டு, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து மேலும் அரை லிட்டர் தண்ணீர் சேர்த்து சாப்பிடலாம்.
சப்ஜா விதையை தண்ணீரில் 30 நிமிடம் ஊற வைத்து இளநீர் தயிர் லெமன் ஜூஸ் ஐஸ்கிரீம் இவற்றில் கலந்தும் சாப்பிடலாம்.