Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

யாரும் நிற்க கூடாது…. உக்காரவும் கூடாது…. வந்தீங்கனா உடனே போயினும் …!!

தமிழகத்தில் டீ கடைகளை திறக்கலாம் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கொரோனா பரவல் நாடு முழுதும் அதிகரித்து வரும் நிலையில் வரும் 17 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பல்வேறு வகைகளில் கட்டுப்பாடு தளர்வுகளை  தொடர்ந்து அரசு அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழக அரசு டீக்கடைகள், பெட்ரோல் பங்குகளுக்கு சில தளர்வுகளை அறிவித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், சென்னையை தவிர பிற இடங்களில் டீ கடைகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.

தமிழகத்தில் வரும் 11 ஆம் தேதி முதல் டீ கடைகளை திறந்து கொள்ளலாம். டீ கடைகளில் பார்சல் மட்டுமே வழங்க வேண்டும். டீ கடைகளில் நின்றோ, அமரவோ அனுமதி இல்லை நிபந்தனைகளை கடைபிடிக்கவிட்டால் டீ கடைகள் மூடப்படும். சென்னையை தவிர தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை டீ கடைகளைத் திறக்கலாம். அதே போல தேசிய நெடுஞ்சாலைகளில் 24 மணி நேரமும் பெட்ரோல் பங்குகள் செயல்படும் என்று தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |