Categories
சற்றுமுன் செங்கல்பட்டு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

இன்று 40 பேர் பாதிப்பு….! ”செங்கல்பட்டை சாய்த்த கொரோனா” 200ஐ தாண்டியது ..!!

செங்கல்பட்டில் மேலும் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒற்றை இலக்கில் கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் கோயம்பேடு சந்தை தொடர்புடைய பலருக்கும் தொற்று உறுதியாகிக்கொண்டு இருப்பதால் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு கூடுதலாக அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. இதில் பெரும்பாலானோர் கோயம்பேடு காய்கறி சந்தையோடு தொடர்புடையவர்கள்.

கோயம்பேடு சந்தைக்கு சென்று காய்கறி வாங்கி வந்தவர்கள், ஓட்டுநர்கள் என ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒரே நாளில் சோத்துபாக்கம் 6, செங்கல்பட்டு 6, கூடுவாஞ்சேரி 2 என 40க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கோயம்பேடு சந்தை தொடர்புடையவர்களாக உள்ளார்கள். இதனால் அங்கு கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 200ஐ தாண்டியுள்ளது.

Categories

Tech |