தமிழகத்தில் கொரோனாவால் பாதித்த 219 பேர் இன்று ஒரே நாளில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொரோனாவின் தாக்கம் மக்களை அதிர்ச்சி அடைய வைக்கிறது. ஒவ்வொரு நாளும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை எதிர்பார்க்க முடியாத அளவுக்கு எகிறிக்கொண்டே செல்கிறது. அதிகமாக தமிழகத்தை பொறுத்தவரை கடந்த சில நாட்களாகவே சென்னை கோயம்பேடு மார்க்கெட் தொடர்புடைய தொடர்புடையவர்கள் அதிக அளவில் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் மூலமாக மட்டும் பல மாவட்டங்களுக்கு கொரோனா தொற்று பரவியது மக்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கோயம்பேடு காய்கறிச் சந்தை மூடப்பட்டுள்ளது. ஒவ்வொருநாளும் மாலை நேரத்தில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரம் தமிழக சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்படும்.
அந்தவகையில் இன்று தமிழக சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட தகவலில் தமிழகத்தில் இன்று மேலும் 526 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எணிக்கை 6535ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 279 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 3330ஆக அதிகரித்துள்ளது.
அதே போல தமிழகத்தல் இன்று 4 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த எண்ணிக்கை 44ஆக உயர்ந்துள்ளது. இது 0.67 % ஆகும். இன்று ஒரே நாளில் 219 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் கொரோனா பதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 1824ஆக உயர்ந்துள்ளது. இது 27.89% ஆகும். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 12 வயதுகுட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 329ஆக உயர்ந்துள்ளது. அதில் 155 பெண் குழந்தைகளும், 174 ஆண் குழந்தைகளும் அடங்குவார்கள் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.