சென்னையில் பிறந்து 5 நாட்களே ஆன குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 526 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6535ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 279 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,330 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் புதிதாக 360 ஆண்கள், 166 பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் சென்னையில் பிறந்து 5 நாட்களே ஆன குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. மேலும் 12 வயதுகுட்பட்ட 329 குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதாக அதிர்ச்சி தகவலை அளித்துள்ளது. கொரோனா வைரஸால் இன்று 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 44ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் 219 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 1,824ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 27.91% பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணடமடைந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை 2,19,406 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 12,990 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 4,664 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.