ஒரு பரிசுத் தொகையை வாங்க சென்றவருக்கு அதைவிட பெரிய பரிசு தொகை கிடைத்தது அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது
அமெரிக்காவில் ஒருவர் லாட்டேரியில் கிடைத்த $1,000 (இந்திய ரூபாய்க்கு 75504) பரிசுதொகையை பெற காத்திருந்த சமயம் வாங்கிய இன்னொரு லாட்டரி சீட்டுக்கு $177,777 (இந்திய ரூபாய்க்கு 13422874 ) பரிசு விழுந்துள்ளது அவரை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. Virginia-வை சேர்ந்த ஜெப் மெலிக் என்பவருக்கு லாட்டேரியில் $1,000 பரிசு கிடைத்துள்ளது.
கிடைத்த பரிசு தொகையை பெறுவதற்காக லாட்டரி வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு சென்றுள்ளார். அந்த மையம் திறக்கப்படாமல் மூடியிருந்ததால் காத்திருந்த அவர் விளையாடிய சுரண்டல் லாட்டரி டிக்கெட்டுக்கு பம்பர் பரிசாக $177,777 விழுந்துள்ளது.
ஒரு பரிசை வாங்க சென்ற பொழுது அதை விட பெரிய பரிசு கிடைத்தது ஜெப்-ஐ மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில், “எனக்கு இரட்டிப்பு அதிர்ஷ்டம் லாட்டேரியில் அடித்தது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த பரிசு தொகையை வைத்து முக்கிய திட்டங்கள் சிலவற்றை வைத்துள்ளேன்” என கூறியுள்ளார்.