தமிழக அரசு மத்திய அரசின் புதிய மின்சார திருத்தச் சட்டத்தை எதிர்த்து கடிதம் எழுதியுள்ளது பாஜகவினரை அதிர்ச்சியடையவைத்துள்ளது.
மத்திய அரசு கடந்த ஏப்ரல் 17-ம் தேதியன்று வெளியிட்ட அறிவிப்பில் 2020 ஆம் ஆண்டு வரவிருக்கும் மின்சார சட்டத் திருத்தம் குறித்து அனைத்து மாநிலம் மற்றும் பிற பங்குதாரர்களிடம் கருத்துக்கள் கேட்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது மின்சார வாரியத்தை தனியார் மயமாக்கலுக்கு வழிவகையில் செய்யும் என்று திமுக கட்டணம் தெரிவித்தது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட திமுக புதிய மின்சார திருத்த சட்டம் விவசாயிகளின் வேலைக்கான இலவச மின்சாரத்திற்கு ஆபத்து.
மின்சாரம் தொடர்பான மாநில அதிகாரங்களை அபகரிக்க புதிய மின்சார திருத்தச் சட்டத்தை கொண்டு வரும் மத்திய அரசுக்கு கடும் கண்டனம். மின்சாரம் மின் கட்டணம் நிர்ணயிக்கும் அதிகாரத்தை மாநில அரசிடம் இருந்து மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் பறித்துக் கொடுத்த மத்திய அரசு இனி ஆணையத்தை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளும் என்று குற்றசாட்டியது.
அதிமுக அரசு காயம் ஏற்படாமல் தன்னை காத்துக் கொள்வதற்காக எப்போதும் செய்வதை போல இப்போது ஆமாம் சாமி போட்டு நழுவி விடாமல் இந்த கருப்பு சட்டத்தை கடுமையாக எதிர்க்க வேண்டும் என்று தனது அறிக்கையில் முக.ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார். அதையடுத்து இதற்கு தமிழக அரசு எதிர்ப்பை பதிவு செய்யும் என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
இந்தநிலையில் தான் மத்திய அரசு கொண்டுவந்துள்ள மின்சார சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதத்தை எழுதியுள்ளார். இந்த சட்டத்திருத்தம் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக அமையும் என்றும், இது மாநில அரசின் அதிகாரங்களை பறிக்கும் என்றும் தமிழக முதலமைச்சர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் விவசாயிகளுக்கு இலவசமாக மின்சாரத்தை மாநில அரசு வழங்கி வரும் நிலையில் மத்திய அரசு மின்சார வாரியத்தை தனியார் மயமாக்கினால் மாநில அரசின் முக்கியமான கொள்கையாக இருக்கும் இது போன்ற விஷயங்கள் எல்லாம் பாதிக்கப்படும் என்றும் தமிழக முதல்வர் எட்டாப்படி பழனிசாமி அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மொத்தத்தில் அதிமுகவை திமுக இறக்கி விட்டு மத்திய அரசை கண்டிக்க வைத்துள்ளது பாஜகவினருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.