Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப ராசிக்கு… ஆதாயம் பெருகும்….நிதானம் தேவை …!

ரிஷப ராசி அன்பர்களே …!  இன்று நண்பரின் தேவையை அறிந்து உதவி செய்வீர்கள். இஷ்ட தெய்வ அருளால் தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி ஏற்படும். ஆதாயம் பெருகும். புத்திரர் விரும்பிய பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். பெண்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். பண விஷயத்தில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள். புதியதாக இன்று கலங்கவேண்டாம் கவனத்தில் கொள்ளுங்கள்.

அதேபோல வெளியூர் பயணம் செய்வதாக இருந்தால் ரொம்ப கவனமாக செயல்படுங்கள். எதிர்பார்த்த பதவி கிடைப்பதில் கொஞ்சம் வாக்குவாதங்கள் ஏற்படலாம். உத்தியோகத்தில் உள்ளவரிடம் பொறுமையாகவும், நிதானமாகவும் பேசுங்கள். பெண்கள் குடும்ப ஒற்றுமைக்காக விட்டுக் கொடுத்துதான் போக வேண்டியிருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை எந்தவித பிரச்சினையும் இல்லாமல் சுமூகமாகவே இருக்கும்.

ஆனால் எப்பொழுதும் போலவே சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொண்டு சரியான நேரத்திற்கு தூங்க செல்வது ரொம்ப நல்லது.  இன்று  முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப சிறப்பு. ஊதா நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சூரியபகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: ஊதா மற்றும் சிகப்பு நிறம்.

 

Categories

Tech |