Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன ராசிக்கு… தடைகள் அகலும்…மதிப்பு அதிகரிக்கும்…!

மிதுன ராசி அன்பர்களே …!     தீர்மானத்தில் அதிருப்தியான சூழல் உருவாகலாம். பொறுப்புடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் தடைகள் அகலும். சேமிப்பு திடீர் செலவுகளையும், நிர்ப்பந்தத்தின் பேரில் யாரும் கடன் வாங்க வேண்டாம். பெண்கள் ஆன்மிக நிகழ்ச்சிகளில் பங்கு பெறக்கூடும். இன்று எடுத்த காரியம் அனுகூலத்தை கொடுக்கும்.

மதிப்பும் மரியாதையும் சீராகவே இருக்கும். வீண் விவாதங்களில் மட்டும் தவிர்க்க வேண்டும். குடும்பத்தில் தம்பதிகளுக்கு இடையே இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் சுமுகமாக மறையும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். முயற்சிகளின் பேரில் சுபகாரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறும். காதலர்களுக்கு இன்று இனிமையான நாளாக அமையும். சொல்லைச் செயலாக்கிக் காட்டுவீர்கள்.

நினைத்ததையும் ஓரளவு முடித்துக் காட்டுவீர்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும்.  அது போலவே இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரியபகவான் வழிபாட்டையும்,சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் பச்சை நிறம்.

Categories

Tech |