கடக ராசி அன்பர்களே …! குடும்பத்தின் மூலம் தொழில் வியாபாரத்தில் புதிய பரிமாணம் ஏற்படும். பெண்கள் குடும்ப நலனில் அக்கறை கொள்வார்கள். மகிழ்ச்சிகரமான சூழல் அமையும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். சற்று முயற்சி எடுத்தால் பதவி உயர்வு உங்களைத் தேடி வரக்கூடும். எதிர்பார்த்திருந்த பணி இடமாற்றம் உங்களை வந்து சேரும். மேலதிகாரிகளின் அனுசரணை இருந்திருக்கும்.
வியாபாரிகள் சிறப்பான முன்னேற்றத்தை இன்று பெறக்கூடும். லாபம் இன்று நன்றாகத்தான் இருக்கும். காதலர்களுக்கும் இன்று இனிமையான நாளாக இருக்கும். எடுக்கும் முயற்சியில் வெற்றி இருக்கும். இன்று பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். யாரிடமும் எப்பொழுதுமே வாக்குவாதத்தில் மட்டும் ஈடுபடவேண்டாம். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சிறப்பாகவே இருக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளம் பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரியபகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: நீலம் பச்சை மற்றும் நீல நிறம்.