கன்னி ராசி அன்பர்களே …! திட்டமிட்ட செயல் நிறைவேறி ஓரளவு நன்மை உண்டாகும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். உபரி பணவரவு வந்து சேரும். குடும்பத்தினருடன் என்றும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பெண்களுக்கு மனம் போல் இன்று அனைத்து விஷயங்களுமே நடக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்கக் கூடிய சூழல் அமையும். இன்று எதையும் திறம்பட செய்து முடித்து பாராட்டுகளையும் பெறுவீர்கள்.
நண்பர்களால் முன்னேற்றமான சூழ்நிலையை அமைத்துக் கொள்வீர்கள். புதிய பொறுப்புகளும் தேடி வரும். காதலர்களுக்கு இன்று இனிமையான நாளாக இருக்கும். திருமண முயற்சி ஏற்பாடுகள் செய்யுங்கள் அனைத்து விஷயங்களும் ஒரு ரொம்ப சிறப்பாக இருக்கும். அதே போல பெரியோர்களிடம் முக்கியமான ஆலோசனையை கேட்டு காரியத்தில் ஈடுபடுங்கள் மிகச்சிறப்பாக இருக்கும். புதிய நபரிடம் கொஞ்சம் விலகியே இருங்கள். பயணங்கள் செல்வதாக இருந்தால் ரொம்ப கவனமாக செல்லுங்கள்.
சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொண்டு சரியான நேரத்திற்கு தூங்கச் செல்லுங்கள். உடல் ஆரோக்கியத்தையும் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளம் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரியபகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: நீலம் பச்சை மற்றும் மஞ்சள் நிறம்.