துலாம் ராசி அன்பர்களே …! அடுத்தவர் விஷயத்தில் எந்தவித கருத்துக்களையும் நீங்கள் சொல்ல வேண்டாம். குடும்ப விஷயத்தை பற்றி மற்றவரிடம் சொல்ல வேண்டாம். ரகசியங்களை கூடுமானவரை பாதுகாத்திடுங்கள். நண்பர்களால் மன கஷ்டம் கொஞ்சம் குறையும். தொழில் வியாபாரத்தில் இருக்கின்ற புகழை பாதுகாக்க வேண்டும். வீட்டுச் செலவுக்கான பண தேவை அதிகரிக்கும். பிராணிகளிடம் கொஞ்சம் விலகியே இருங்கள்.
பலவிதமான பிரச்சனைகள் இருந்து இன்று விடுபடுவீர்கள். பின்தங்கிய நிலையில் இருப்பவர்கள் முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லக்கூடும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் இருக்கட்டும். சிலருக்கு ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை ஏற்படலாம். நல்ல பழக்கமும் இன்றிருக்கும். காதலர்களுக்கும் இன்று இனிமையான நாளாகவே இருக்கும். அதுபோலவே கணவன் மனைவிக்கு இடையே அன்பும் இருக்கும்.
குடும்பத்தாரின் ஒத்துழைப்பால் முக்கியமான பணிகள் அனைத்துமே சிறப்பாக நிறைவேறும். இன்று முக்கியமான பணியை நீங்கள் செய்யும் மேற்கொள்ளும் பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளம் மஞ்சள் எப்பொழுதும் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சிவபெருமான் வழிபாட்டையும், சூரியபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: நீலம் மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்.