Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு… இலக்கு பூர்த்தியாகும்…வேலைச்சுமை அதிகரிக்கும் …!

தனுசு ராசி அன்பர்களே …!    இன்று திட்டமிட்ட பணிகள் அனைத்தும் சிறப்பாக நிறைவேறும். தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள் தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு பூர்த்தியாகும். உபரி வருமானம் சேமிப்பதற்கு உதவும். பெண்கள் வீட்டு தேவைகளை தாராள செலவில் நிறைவேற்றுவார்கள். ஆரோக்கியம் பலம் பெறும். இன்று தூரத்தில் இருக்கும் உறவினரால் நன்மை ஏற்படும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும்.

ஆனாலும் வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. உடன் பணிபுரிவோரிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவும். சிலருக்கு எதிர்பாராத இட மாற்றத்தை நீங்கள் சந்திக்கலாம். காதலர்களுக்கு இன்று இனிமையான நாளாக இருக்கும். இருந்தாலும் எப்பொழுதும் போலவே வாக்குவாதத்தில் மட்டும் ஈடுபடவேண்டாம். திருமண முயற்சிகள் ஏற்பாடுகள் செய்யுங்கள் சிறப்பாகவே அனைத்தும் நடக்கும்.

இன்று கொடுக்கல்-வாங்கலில் ரொம்ப கவனமாக தான் இருக்கவேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது மிகவும் சிறப்பு. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சிவபெருமான் வழிபாட்டையும், சூரியபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப சிறப்பாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்.

Categories

Tech |