தமிழக அரசு மதுக்கடைகளை திறக்க எடுக்கும் முயற்சிக்கு நடிகர் ரஜினிகாந்த கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகம் பாதித்த பகுதிகள் மற்றும் சென்னை மாவட்டம் தவிர்த்து பிற பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மது கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை அடுத்து 2 நாட்கள் தமிழகத்தில் மது விற்பனை தமிழகத்தில் ஜோராக நடைபெற்றன. அதேநேரத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த வழிகாட்டல்கள் மது விற்பனையில் மீறப்பட்டதுள்ளதாக பல்வேறு விமர்சனகள் எழுந்தனர்.
இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் டாஸ்மாக் மதுக்கடைகளை ஊரடங்கு உத்தரவு முடியும் வரை திறக்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
இந்நிலையில் தமிழக அரசு மதுக்கடைகளை மீண்டும் திறக்க முயற்சி எடுப்பதற்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பதிவில், இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவுகூர்ந்து #கஜானாவை_நிரப்ப_நல்ல_வழிகளை_பாருங்கள் என்று பதிவிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவுகூர்ந்து #கஜானாவை_நிரப்ப_நல்ல_வழிகளை_பாருங்கள்
— Rajinikanth (@rajinikanth) May 10, 2020