செங்கல்பட்டில் இன்று ஒரே நாளில் 60 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 284 ஆக உயர்ந்துள்ளது. அதில் 35 ஆண்கள், 25 பெண்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. பாதிக்கப்பட்டுள்ள பெரும்பாலானோர் காய்கறி வியாபாரிகள் என தகவல் வெளியாகியுள்ளது.
80க்கும் மேற்பட்டவர்கள் கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடையவர்கள் என கூறப்படுகிறது. கோயம்பேடு சென்று திரும்பிய நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையின் புறநகர் பகுதியான செங்கல்பட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம், தாம்பரம், பெரும்பாக்கம் பரங்கிமலை பகுதி, அனுமந்தபுரம், நாவலூர், பொழுச்சலூர், திருநீர்மலை, திருப்போரூர், புதுப்பெருங்குளத்தூர் உள்ளிட்ட பல பகுதிகளில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஒரு காய்கறி வியாபாரிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று அவரது குடும்ப உறுப்பினர்கள் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ஒரு மருத்துவர் , ஒரு தூய்மை பணியாளர், ஆட்டோ ஓட்டுநர் என பலதரப்பட்டவர்களுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.