Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 26 மாவட்டங்களில் கோயம்பேடு சந்தையில் இருந்து கொரோனா பரவியுள்ளது – முழு விவரம்!

தமிழகத்தில் 26 மாவட்டங்களில் கோயம்பேடு சந்தையில் இருந்து கொரோனா பரவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கோயம்பேடு தொடர்புகள் மூலம் சென்னையில் உள்ள பகுதிகளிலும், பிற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் கோயம்பேடு தொடர்புடையவர்கள் 1,867 பேர் என மாநில சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இதனால் கோயம்பேடு சந்தையானது தற்காலிகமாக மூடப்பட்டுள்ள நிலையில் திருமழிசையில் தற்காலிக சந்தை அமைக்க திட்டமிடப்பட்டது.

சென்னையில் நேற்று ஒரே நாளில் 279 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் மொத்த எண்ணிக்கை 3,330 ஆக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலானோர் கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடையவர்கள். இந்த நிலையில் சென்னை உட்பட 26 மாவட்டங்களில் கோயம்பேடு சந்தையில் இருந்து கொரோனா வைரஸ் பரவி பாதிப்பை ஏற்படுத்தி இருப்பது தெரியவந்துள்ளது.

அதில் சென்னை 735, கடலூர் – 317 அரியலூர் 239, விழுப்புரம் – 177 திருவள்ளூர் – 124, பெரம்பலூர் – 56 கள்ளக்குறிச்சி 45 செங்கல்பட்டு 38, காஞ்சிபுரம் – 33, திண்டுக்கல் – 24, திருவண்ணாமலை – 17, திருச்சி – 10, தஞ்சாவூர் – 8 பேர், வேலூர் – 6, திருப்பத்தூர் – 5, நெல்லை – 5, நீலகிரி, புதுக்கோட்டை, ராணிப்பேட்டையில் தலா 4 பேருக்கும், தருமபுரி, தேனி மாவட்டங்களில் தலா 3 பேர், திருப்பூரில் 2 பேர், தூத்துக்குடி, திருவாரூர்,தென்காசி, கரூர் மாவட்டங்களில் தலா ஒருவரும் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Categories

Tech |