Categories
அரசியல் மாநில செய்திகள்

ஊரடங்கின் கடைசி வாரம் நாளை தொடங்குகிறது… நம்பிக்கையோடு இருங்கள், காலம் மாறும் – ப.சிதம்பரம் ட்வீட்!

ஊரடங்கின் கடைசி வாரம் நாளை தொடங்குகிறது, நம்பிக்கையோடு இருங்கள் என ப.சிதம்பரம் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 62,939ஆக உயர்ந்துள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,109ஆக உள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வரும் நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மே 17 ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீடிக்கட்டுள்ளது. முன்னதாக மே 3ம் தேதி ஊரடங்கு உத்தரவு இருந்த நிலையில், கொரோனா பரவல் அதிகரித்து வந்ததால் ஊரடங்கு உத்தரவானது இரண்டாம் முறையாக மே 17ம் தேதி வரை நீடிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவானது முடியவடைய இன்னும் 7 தினங்களே உள்ளது. இதுக்குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம், மே 17 வரை நீடிக்கப்பட்ட ஊரடங்கின் கடைசி வாரம் நாளை (திங்கள்கிழமை) தொடங்குகிறது. தொற்று பரவுகிறது, 3 சதவிகிதம் மரணமடைகிறார்கள், பொருளாதாரம் 100 சதவிகிதம் குலைந்து விட்டது,

ஏழை நடுத்தர மக்களின் வாழ்வாதாரங்களும் சிறு, குறு தொழில்களும் சிதைந்து விட்டன என கூறியுள்ளார். மேலும் இச்சூழ்நிலையில் உங்களுக்கு நான் என்ன ஆறுதல் சொல்ல முடியும்? நம்பிக்கையோடு இருங்கள், காலம் மாறும், காங்கிரஸ் கட்சி சொன்ன யோசனைகளை நாடும் அரசும் ஏற்றுக்கொள்ளும் விடியல் ஏற்படும். தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் கவனமாக, பாதுகாப்பாக இருக்க வேண்டுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |