Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking : தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 669 பேருக்கு கொரோனா…. பாதிப்பு எண்ணிக்கை 7,000ஐ கடந்தது!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 669 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7204ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 509 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,839 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் புதிதாக 412 ஆண்கள், 257பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவள்ளூர் – 47, செங்கல்பட்டு – 43, நெல்லை, கிருஷ்ணகிரி தலா 10 பேர், பெரம்பலூர் – 9, காஞ்சிபுரம் – 8, விழுப்புரம், ராணிப்பேட்டையில் தலா 6, அரியலூர், மதுரை தலா 4, தேனி, வேலூரில் தலா 3 பேர், விருதுநகர் 2 பேருக்கும், கடலூர், கரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருப்பத்தூரில் தலா ஒருவருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸால் இன்று 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 47ஆக உயர்ந்துள்ளது.

Categories

Tech |