தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 669 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7204ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 509 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,839 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 135 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 1,959ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸால் இன்று 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 47ஆக உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை :
1. சென்னை – 3839
2. கோயம்புத்தூர் – 146
3. திருப்பூர் – 114
4. திண்டுக்கல் – 108
5. ஈரோடு – 70
6. திருநெல்வேலி – 90
7. செங்கல்பட்டு – 267
8. நாமக்கல் – 77
9. திருச்சி – 65
10. தஞ்சாவூர் – 66
11. திருவள்ளூர் – 337
12. மதுரை – 117
13. நாகப்பட்டினம் – 45
14. தேனி – 59
15. கரூர் – 48
16. விழுப்புரம் – 299
17. ராணிப்பேட்டை – 66
18. தென்காசி – 52
19. திருவாரூர் – 32
20. தூத்துக்குடி – 30
21. கடலூர் – 395
22. சேலம் – 35
23. வேலூர் – 32
24. விருதுநகர் – 39
25. திருப்பத்தூர் – 28
26. கன்னியாகுமரி – 17
27. சிவகங்கை – 12
28. திருவண்ணாமலை – 82
29. ராமநாதபுரம் – 26
30. காஞ்சிபுரம் – 122
31. நீலகிரி – 14
32. கள்ளக்குறிச்சி – 59
33. பெரம்பலூர் – 104
33. அரியலூர் – 275
34. புதுக்கோட்டை – 6
35. தருமபுரி – 4.
36. கிருஷ்ணகிரி – 20
மொத்தம் – 7,204.