Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள்

ரொம்ப ஓவரா போய்கிட்டு இருக்காங்க….! வெகுண்டெழுந்த புதுவை முதல்வர் ..!!

கலால் துறை மூலமாக புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி அதிகார துஷ்பிரயோகம் செய்வதாக மாநில முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார் .

இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் சென்னையிலுள்ள கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் இருந்து வந்தவர்கள் இரண்டு பேருக்கும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல காரைக்கால் மாவட்டத்தில் இருக்கும்சுரக்குடையைச் சேர்ந்தவரை பரிசோதித்ததில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.வெளிமாநிலங்களில் இருந்து புதுச்சேரி வந்தவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இது வெளிநாட்டில் இருந்து 2,700 பேர் வர இருக்கின்றனர். தவறு யார் செய்தாலும் அதைத் தட்டிக் கேட்கலாம், அதற்காக புகார் கொடுத்த மதுக் கடை உரிமையாளர் மீது வழக்கு போடுவது வந்து மிகவும் தவறானது. ஆளுநர் கிரண்பேடி காவல்துறைக்கு நேரடியாக உத்தரவிட்டு மாநிலத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார். ஆதாரமற்ற குற்றச்சாட்டை வைத்துக்கொண்டு கலால் துறை மூலமாக மதுக் கடையின் உரிமத்தை பறிப்பது அதிகார துஷ்பிரயோகம். இது குறித்து நான் தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளேன் என்று நாராயணசாமி விமர்சித்தார்.

Categories

Tech |