கன்னி ராசி அன்பர்களே …! பணம் கையில் வந்து சேரும். உறவினர்கள் நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். அரசால் அனுகூலம் உண்டாகும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டாகும். உங்களுடைய கருத்துக்கு ஆதரவு பெருகும். திடீர் யோகம் கிட்டும். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்துச் செல்வது மனதுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
கணவன் மனைவிக்கு இடையே சிறிய வாக்குவாதங்கள் ஏற்படலாம். பிள்ளைகள் உங்களை புரிந்து கொண்டு நடப்பது எப்பொழுதுமே மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். எதைப்பற்றியும் கவலை கொள்ளாதீர்கள் காரியத்தை மட்டும் சரியாக செய்யுங்கள். அதுபோலவே காதலர்கள் இன்று இனிமையான வார்த்தையால் பேசிக் கொள்வது நல்லது.
வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெளிர் நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெளிர் நீல நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் ரொம்ப நல்ல படியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: வெளிர்நீலம் மற்றும் இளம்மஞ்சள் நிறம்.