Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…மனஅழுத்தம் ஏற்படும்…பொறுமை தேவை …!

துலாம் ராசி அன்பர்களே …!   இன்று சொன்ன சொல்லைக் காப்பாற்றிவிடுவீர்கள். அதேபோல காப்பாற்ற வேண்டும் என்ற பயமும் உங்களுக்கு இருந்து கொண்டே இருக்கும். வியாபாரத்தில் வேலையாட்களால் மனஅழுத்தம் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள் ஆக இன்றைய நாள் இருக்கும். சாமர்த்தியமான பேச்சு மூலம் காரிய வெற்றி உண்டாகும்.

அடுத்தவரை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டும். இன்று எந்த ஒரு நிலையையும் சமாளிக்க வேண்டியிருக்கும். இடையூறுகளையும் நீங்கள் சந்திக்க வேண்டியிருக்கும். ஆனால் எல்லாமே உங்களுக்கு சிறப்பான தானாகவே நடக்கும். எதைப்பற்றியும் கவலை வேண்டாம். அலட்சியம் மட்டும் தயவு செய்து காட்ட வேண்டாம். காரியங்களைப் பொறுமையாகவும் கண்ணும் கருத்துமாக செய்யுங்கள். உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை ஓரளவு சீராக இருக்கும்.

சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளுங்கள். காதலர்களுக்கு இன்று ஓரளவு இனிமையான நாளாக இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு எப்பொழுதுமே அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் பச்சை நிறம்.

Categories

Tech |