Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

மே 12ஆம் தேதி முதல் பயணிகள் ரயில் இயக்கப்படும் – மத்திய அரசு தகவல் …!!

வருகின்ற 12ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ரயில்வே சேவை இயக்கப்படும் என்று மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

வருகின்ற 12ஆம் தேதி முதல் டெல்லியில் இருந்து சென்னை உள்ளிட்ட 15 நகரங்களுக்கு ரயில்கள் இயக்கப்படும். முதல்கட்டமாக இந்த ரயில் சேவை தொடங்கும் என்று மத்திய ரயில்வே துறை அமைச்சகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்த ரயில்கள் அனைத்து திரும்ப வந்துட்டு போவது போல தான் இயக்கப்படுகின்றன.

டெல்லியிலிருந்து மேற்கு வங்க மாநிலம், பாட்னா பிலாஸ்பூர்,  புவனேஸ்வர், செகந்திராபாத், பெங்களூரு, சென்னை, திருவனந்தபுரம், மும்பை, அகமதாபாத் ஆகிய முக்கிய நகரங்களுக்கு இந்த ரயில் சேவையானது தொடங்க இருக்கின்றது. தென்னிந்தியாவைப் பொருத்தவரை சென்னை பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு திருவனந்தபுரம் போன்ற நகரங்களுக்கும் இந்த ரயில் சேவையை இயக்கப்படுகிறது என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

Categories

Tech |