பிரிட்டனில் ஊரடங்கு தளர்த்தப்பட்டால் நாடு சவக்காடாக மாறும் என நிபுணர்கள் பிரதமர் ஜான்சனை எச்சரித்துள்ளனர்
பிரித்தானியாவில் 45 நாட்களுக்கு மேலாக அமலில் இருந்த ஊரடங்கை பிரதமர் ஜான்சன் தளர்த்த போவதாக வெளியான தகவலை தொடர்ந்து நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போதைய சூழலில் இறப்பு விகிதம் குறைந்து வருவதனால் பிரதமர் ஜான்சன் ஊரடங்கு கட்டுப்பாட்டை தளர்த்த முடிவு செய்துள்ளார். ஆனால் அமெரிக்க அதிபர் டிரம்ப் போன்று ஜான்சனும் கண்மூடித்தனமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டாமென பிரிட்டனை சேர்ந்த பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வு கோரும் உல்லாச பிரியர்களாக இருக்கிறார்கள். ஆனால் நிபுணர்கள் ஊரடங்கு தளர்த்தப்பட்டால் இந்த ஆண்டின் இறுதிக்குள் ஒரு லட்சம் மக்கள் இறக்கக்கூடும் எனக் கூறியுள்ளனர். அதோடு ஊரடங்கு தளர்த்துவது பிரிட்டனை சவக்காடாக மாற்றும் எனவும் எச்சரித்து வருகின்றனர். இதுவரை Stay Home, Protect NHS, Save Lives என்று இருந்ததை மாற்றி தற்போது “Stay Alert, Control the virus, Save lives” இவ்வாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
வார்த்தைகளில் ஏற்பட்ட இந்த மாறுதல்கள் ஆறு வாரங்களாக முன்னெடுக்கப்பட்ட கட்டுப்பாடுகளை கட்டவிழ்த்துவிடும் என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். வீட்டில் இருக்க சொல்லும் அரசின் பரிந்துரை நீக்கப்பட்டால் மக்கள் கட்டுப்பாடின்றி வெளியே செல்ல தொடங்குவது உறுதி. இதன் காரணமாகவே பிரிட்டனை சேர்ந்த நிபுணர்களும் மக்களும் ஊரடங்கு தளர்வை தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர்.