Categories
தேசிய செய்திகள்

கொரோனா பாதித்த 1 1/2 வயது குழந்தை….. தொற்றை மறந்து செய்யும் சுட்டித்தனம்…. வைரலான வீடியோ…!!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை மருத்துவர்களிடம் சுட்டித்தனம் செய்த வீடியோ வைரலாகியுள்ளது 

சண்டிகரில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒன்றரை வயது குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் பறக்கும் முத்தம் கொடுத்து மருத்துவரிடம் விளையாடிய காட்சி காணொளியாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தொற்று அறிகுறிகளுடன் அங்கிருக்கும் முதுகலை ஆராய்ச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை இரவு நேரத்தில் தூங்காமல் சுட்டித்தனம் செய்து கொண்டிருந்தது.

இதனை புரிந்துகொண்ட இரவு நேரம் பணிபுரிந்த மருத்துவர் குழந்தையிடம் கண்ணடிக்க சொல்லியும் பறக்கும் முத்தம் கொடுக்குமாறும் கேட்டுள்ளார் குழந்தையும் அதன் படி செய்துள்ளது. குழந்தை பறக்கும் முத்தத்தை தன்னை அறையின் உள்ளே விட்டு விட்டு கண்ணாடி வழியே பார்த்துக் கொண்டிருக்கும் தாய்க்கு கொடுத்துள்ளது. குழந்தையின் சுட்டி தனத்தைப் தாய் கண்ணாடி வெளியே நின்றுகொண்டு காணொளியாக பதிவு செய்துள்ளார்.

Categories

Tech |