கும்ப ராசி அன்பர்களே …! குடும்பத்தாரின் ஒத்துழைப்பு உங்களுக்கு அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் அனைத்துமே முடிவடையும். ஆன்மிகத்தில் நாட்டம் செல்லும். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிட்டும். உத்தியோகத்தில் புதிய அதிகாரி உங்களை மதிக்க கூடும். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாளாக தான் இன்றைய நாள் இருக்கும்.
குடும்பத்தில் வீண் விவாதங்கள் அவ்வப்போது வந்து செல்லும். கணவன் மனைவிக்கு இடையே நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. பிள்ளைகள் உடல் நலத்தில் கவனமாக இருங்கள். உறவினர்கள் நண்பர்களிடம் கவனமாக பழகுங்கள். நீங்கள் யாரையும் எடுத்தெறிந்து மட்டும் பேச வேண்டாம். அதேபோல மற்றவர் பிரச்சனையில் தயவு செய்து தலையிட வேண்டாம்.
பஞ்சாயத்துக்கள் செய்கிறேன் என்று செல்ல வேண்டாம். இன்று புதிதாக கடன் வாங்கக் கூடிய சூழல் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை எப்பொழுதும் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் நல்லபடியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் பச்சை நிறம்.