ஒபாமா தற்போதைய அதிபர் டிரம்பை சுயநலவாதி என்றும் பழமைவாதி என்றும் விமர்சனம் செய்துள்ளார்
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டிருக்கும் செய்தியின் அடிப்படையில் சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலக அளவில் 40 லட்சமாக உயர்ந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 77 ஆயிரத்து 860 ஆக அதிகரித்துள்ளது. உலக அளவில் அதிக அளவு பாதிப்புக்கு உள்ளான நாடுகள் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகின்றது. அமெரிக்காவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 13 லட்சத்து 50 ஆயிரத்தை கடந்துள்ளது.
அதிபரின் வெள்ளை மாளிகையில் பணிபுரிந்த ஊழியர்கள் இருவருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதோடு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்தை கடந்துள்ளது. அதுமட்டுமன்றி பொருளாதாரம் அதிகளவு பாதிப்பை சந்தித்து 2 கோடி மக்கள் தங்கள் வேலையை இழக்கும் நிலையில் ட்ரம்பின் குழப்பம் நிறைந்த முடிவுகளை தற்போது இருக்கும் மோசமான நிலைக்கு காரணம் என்று முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து சிஎன்என் செய்தி வெளியிட்டதில் “ஏற்பட்டிருக்கும் இழப்பு குறித்து சிறிதும் கவலைப்படாத அரசினால் தான் இன்று அமெரிக்கா பேரிழப்பை சந்தித்துள்ளது.
நாட்டைப் பிளவுபடுத்தும் நோக்கிலும், சுயநலவாதியாகவும், பழமைவாதியாகவும் இருக்கும் அரசாங்கத்தால் அமெரிக்கா தற்போது பெரிதும் பாதிப்படைந்துள்ளது. அமெரிக்காவை உலக நாடுகள் உன்னிப்பாக கவனிக்கின்றனர் என்பதை முழுவதும் மறந்து ஒரு அரசு செயல்பட்டு வருகின்றது. அமெரிக்காவிற்கு இந்த நிர்வாகம் பயனற்றது என்று நான் நினைக்கிறேன். எனவே ஜீ பிடனை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட உள்ளேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் விரைவில் அதிபருக்கான தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் கொரோனா விவகாரம் தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கும் என கூறப்படுகின்றது.