கோடை காலத்தில் என்னென்ன விஷயங்களை நாம் முன்னெடுக்க வேண்டி இருக்கிறது. அதே சமயம் நாம் கொரோனாவையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. 40 நாட்களுக்கு மேலாக மக்கள் வீட்டுக்குள் முடங்கி இருக்ககூடிய இந்த சூழலில் மன அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக வருகிறது.
அதே சமயம் கோடை காலத்தில் எந்த அளவுக்கு சத்தான உணவுகளை எடுத்துக் கொள்கிறோமோ அந்த அளவுக்கு உடல் சக்தி நமக்கு அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகளவில் இருக்கும். கொரோனா காலத்தில் சமூக விலகல் எந்த அளவுக்கு முக்கியமான ஒரு விஷயமா கடைபிடிக்க வேண்டியிருக்கோ அதே போன்று கோடை காலத்தில் சத்தான உணவுகளை எடுத்துக் கொள்வது மிக மிக முக்கியம்.
சில உணவு வகைகள்
கொரோனாவையும் வெப்பத்தையும் ஒரே நேரத்தில் சமாளிக்கும் சத்தான பழ வகைகள். மாம்பழம், தர்பூசணி, ஆரஞ்சு, அன்னாசி, திராட்சை.
- மாம்பழத்தை பொருத்தவரைக்கும் இதில் இரும்பு மற்றும் செலினியம் சத்து அதிகமாக இருக்கும். மாம்பழம் கோடை காலத்தில் மட்டுமே கிடைக்கக்கூடிய முக்கியமான ஒரு பழமாகவும் பார்க்கப்படுகிறது.
- தர்பூசணி, நீர் சத்து அதிகம் இருக்கிறது. செல்களை பாதுகாக்கும், புற்றுநோயை தடுக்க உதவவும் தர்பூசணி மிக அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.
- ஆரஞ்சு பொட்டாசியம் அதிகமாக இதில் இருக்கிறது. உடலில் தங்கியுள்ள மாசுகளை அகற்றும். தசைப்பிடிப்பை தடுப்பதற்கும் ஆரஞ்சு பழத்தை நாம் உட்கொள்ள வேண்டியிருக்கிறது.
- அண்ணாச்சி கொழுப்புகளை கரைய சீய்த்து கோடை காலத்திற்கு ஏற்ற பழமாக உள்ளது.
- திராட்சை தாகத்தை தணிக்கும், ரத்தத்தை சுத்திகரிக்கும், புற்றுநோய், இதய நோய் வராமல் தடுக்கும்.
உணவை தவிர்த்து மற்ற வழிகள்
யோகா உடலில் ஏற்படும் அணைத்து பாதிப்புகளுக்கும் தீர்வு தரும் ஒரு பயிற்சி யோகா. யோகாவில் இன்னும் நிறைய விஷயங்கள் உள்ளது. மன அழுத்தத்திற்கு யோகா விடை தருமா அப்படிங்கிற ஒரு கேள்விக்கு பதில் ஆம் நிச்சயம் தரும். யோகா பயிற்சி உடலில் மன அழுத்தத்தை குறைப்பதற்கான மிக அதிகமான வாய்ப்புகள் இருக்கு.
இந்த நேரத்திற்கு தேவையான யோகாசனம் கருடாசனா, உத்தனாசனா, பாலாசன, வஜ்ராசனம். இவைகளை பயிற்சி செய்தால் நாம் மன அழுத்தத்தை குறைத்துக்கொள்ள முடியும். அது மட்டுமல்லாமல் உடற்பயிற்சி செய்ய ஜிம் இல்லையென்றாலும் நமது வீட்டு மாடியில் உடல் பயிற்சி, யோகா, நடைப்பயிற்சி போன்றவற்றை சமூக விகளுடன் செய்வதால் மன அழுத்தம் குறைந்து மனதின் வலிமை அதிகரிக்கும்.