Categories
தேசிய செய்திகள்

30 ரயில் விடுறோம்… 15 நகரம் போகலாம்… என்னென்னெ ஊருக்கு செல்லலாம் ?

பயணிகள் ரயில் சேவைக்கான முன்பதிவு இன்றிலிருந்து தொடங்கும் என்று மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் வரும் 12ஆம் தேதி முதல் பயணிகள் ரயில் சேவை துவங்கப்படும் என, மத்திய ரயில்வே அமைச்சகம் நேற்று இரவு அறிவிப்பு வெளியிட்டது. இந்த ரயில்கள் அனைத்தும், சிறப்பு ரயில்களாக இயக்கப்படும் என தெரிவித்துள்ள ரயில்வே அமைச்சகம், இதற்கான முன்பதிவு இன்றிலிருந்து (திங்கள்கிழமை) மாலை 4 மணிக்கு துவங்கும் என்று தெரிவித்துள்ளது.

மேலும், ரயில் பயணிகள் முக கவசம் அணிந்து வருமாறு அறிவுறுத்தியுள்ள ரயில்வே அமைச்சகம், பயணிகளுக்கு தெர்மல் ஸ்கேனிங் செய்த பின்னரே ரயில்களில் அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவித்துள்ளது

இதன்படி, புதுடெல்லியில் இருந்து, மும்பை, பெங்களூரு, சென்னை, திருவனந்தபுரம் செகந்திராபாத், பெங்களூர்,  அகமதாபாத், ஜூம்மு தாவி, மும்பை, திப்ரூகர், அகர்தலா, ஹவுரா, பாட்னா, பிளாஸ்பூர், ராஞ்சி, புவனேஸ்வர்உள்ளிட்ட 15 நகரங்களை இணைக்கும் விதமாக இரு மார்க்கங்களிலும் 30 ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |