Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கை முடிச்சிருவோம்…! ”நான் சொல்லுறது சரி தான” மோடி இன்று ஆலோசனை …!!

அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 67,161 ஆக உயர்ந்துள்ள நிலையில், கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 20,969 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வரும் நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மே 17 ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீடிக்கட்டுள்ளது.முன்னதாக மே 3ம் தேதி ஊரடங்கு உத்தரவு இருந்த நிலையில், கொரோனா பரவல் அதிகரித்து வந்ததால் ஊரடங்கு உத்தரவானது இரண்டாம் முறையாக மே 17ம் தேதி வரை நீடிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவானது முடியவடைய இன்னும் 6 தினங்களே இருக்கும்நிலையில் அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று  மாலை ஆலோசனை நடத்த உள்ளார். காணொலி காட்சி மூலம் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி பங்கேற்க இருக்கிறார்.

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை முடிவிற்கு கொண்டு வரும் எண்ணத்தில் மத்திய அரசு இருப்பதாக கூறப்படுகிறது. 17ம் தேதிக்கு பின் மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்படாது என்று தகவல் வெளியானது. ஆனால் மாநிலங்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். எனவே ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கலாமா? வேண்டாமா? என இன்று நடைபெறும் ஆலோசனையில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். ஒருவேளை லாக்டவுனை நீக்கினால் எப்படி படிப்படியாக நீக்குவது. கட்டுப்பாடுகளை எப்படி கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்துவது என்பது தொடர்பாக ஆலோசிக்க உள்ளனர்.

அதே நேரத்தில் மத்திய அரசு நாளை முதல் பயணிகள் ரயில் சேவை இயங்கும் என்று நேற்று இரவு உத்தரவு பிறப்பித்தது முக்கிய 15 நகரங்களுக்கு இயக்கப்படும் இந்த ரயில் சேவைக்கான முன்பதிவு இன்று தொடங்க இருக்கின்றது. அப்படியானால் ஊரடங்கு நீக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகவே இருக்கின்றது. கொரோனாவால் அதிகம் சிதைந்துள்ள மும்பை , சென்னைக்கும் இந்த ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதனால் இன்றைய ஆலோசனையில் 17ஆம் தேதியோடு ஊரடங்கை முடிவுக்கு கொண்டு வர மாநில முதல்வர்களிடம் பிரதமர் ஒப்புதல் வாங்குவார் என்று தெரிகிறது

Categories

Tech |