புனரமைப்பு மற்றும் பொருளாதாரத்திற்கே முன்னுரிமை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு நாம் யாரும் எதிர்பார்க்க முடியாத அளவுக்கு இருக்கின்றது. நேற்று ஒரே நாளில் 669 பேருக்கு தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு 7,204ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக தலைநகர் சென்னை பெருமளவு பாதிப்பை சந்தித்துள்ளது. தமிழக அரசும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பிலிருந்து தமிழகம் மீண்டு வரும் இந்த வேளையில், புனரமைப்பு மற்றும் பொருளாதாரமே, தமது முன்னுரிமையாக இருக்கும் என்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ட்விட் செய்த முதல்வர், பொருளாதார மறுமலர்ச்சிக்கு உதவுதற்காக ஏற்கனவே உயர் மட்டக்குழுவை அமைத்துள்ளதாக தெரிவித்துள்ள முதலமைச்சர், நமது மாநிலத்தில் அடித்தளத்தை கட்டமைப்பதற்காக, நிறுவனங்களை ஈர்க்க, சிறப்புக் குழுவை அமைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இது, தமிழகத்தின் மறுமலர்ச்சி மற்றும் வளர்ச்சியின் திசையில் நாம் எடுக்கவிருக்கும் நடவடிக்கைகளின் முதல்படி என்று தெரிவித்துள்ள அவர், தமிழ் மக்கள் எத்தகைய சூழலிலும் மீண்டெழும் தன்மை கொண்டவர்கள் எனவும், இந்த நெருக்கடியிலிருந்து மீண்டு, நமது மாநிலத்தை மீட்டு உருவாக்குவோம் என்றும் தெரிவித்துள்ளார்.