இந்தியாவில் 67 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு. நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 48வது நாளாக அமலில் உள்ளது. மே 17ம் தேதியோடு 3ம் கட்ட ஊரடங்கு முடிவடையுள்ளது.ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன.
மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, நாட்டில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 67,152 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 22,171 பேரும், குஜராத்தில் 8,194 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் 7,204 பேரும், டெல்லியில் 6,923 பேரும், ராஜஸ்தானில் 3,814 பேரும், மத்திய பிரதேசத்தில் 3,614 பேரும், உத்தரபிரதேசத்தில் 3,467 பேரும் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிப்புகளின் பட்டியலில் தமிழகம் 3வது இடத்தில் உள்ளது. மேலும் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,206 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 832 பேரும், குஜராத்தில் 493 பேரும், மத்திய பிரதேசத்தில் 215 பேரும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். மேலும் மேற்குவங்கத்தில் 185 பேர் கொரோனாவால் இதுவரை பலியாகியுள்ளனர். இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 20,917 ஆக அதிகரித்துள்ளது.