Categories
தேசிய செய்திகள்

“புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த பகுதிக்கு நடந்து செல்வதை அனுமதிக்காதீங்க” : மத்திய அரசு கடிதம்

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு நடந்து செல்வதை அனுமதிக்க வேண்டாம் என உள்துறை செயலாளர் அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில், “வெளிமாநில தொழிலாளர்கள் சாலை மற்றும் ரயில் தண்டவாளம் வழியாக நடந்து சொந்த ஊர் செல்வதை அனுமதிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார். நடந்து செல்பவர்கள் மீட்டு முகாம்களில் தங்கவைத்து உணவு, தண்ணீர் வழங்க வேண்டும் என செயலாளர் தெரிவித்துள்ளார். அதேபோல புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பேருந்து அல்லது சிறப்பு ரயில் மூலம் சொந்த ஊர்களுக்கு செல்வதை உறுதி செய்ய வேண்டும்” என உத்தரவிடப்பட்டுள்ளது.
அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை மகாராஷ்டிராவில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது சரக்கு ரயில் ஏறிய சம்பவம் நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மகாராஷ்டிராவில் இருந்த சில புலப்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலமான சத்தீஸ்கர் செல்வதற்காக தண்டவாளத்தில் நடந்து சென்றுள்ளனர்.

கர்மாட் பகுதியில் வந்தபோது உடல் அசதி காரணமாக தொழிலாளர்கள் ரயில் தண்டவாளத்தில் படுத்துத் உறங்கியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், கடந்த வெள்ளிக்கிழமை காலை 6 மணி அளவில் அந்த வழியே சரக்கு ரயில் ஏறியதில் குழந்தை உட்பட சம்பவ இடத்திலேயே 14 பேர் உயிரிழந்தனர். இதன் காரணமாக இனி எந்த ஒரு தொழிலாளரும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக சில வழிமுறைகளை மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதமாக அனுப்பியுள்ளது.

Categories

Tech |