விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரை அடுத்த சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவி வீட்டில் இருந்த போது திடீரென புகை வந்துள்ளது. அருகில் உள்ளவர்கள் சென்று பார்த்தபோது அந்த மாணவி உடலில் தீக்காயங்களுடன் எரிந்து கொண்டிருந்தார். இதனையடுத்து அவரை மீட்ட பொதுமக்கள் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
80 சதவீதம் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த மாணவியிடம் விழுப்புரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதி அருண்குமார் வாக்குமூலம் பெற்றார். அந்த வாக்குமூலத்தில் முருகன் மற்றும் கலிய பெருமாளுக்கு வீட்டிற்கு வந்தார்கள். என் வாயில் துணியை வைத்து பிறகு தலையில் மண்ணெண்ணெய் மற்றும் பெட்ரோலை ஊற்றினார்கள். வாயில் துணி இருந்ததால் தொடர்ந்து பேச முடியவில்லை. என் மீது தீவைத்து விட்டு கதவை தாளிட்டு சென்று விட்டார்கள் என்று முருகன், கலியபெருமாள் தான் காரணம் என்று மாணவி ஜெயஸ்ரீ தெரிவித்தார்.
இதனையடுத்து தொடர்ந்து நடைபெற்ற சிகிச்சையில் மாணவி ஜெயஸ்ரீ சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அதிமுக முன்னாள் கவுன்சிலர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் அந்த மாணவியின் தந்தைக்கும் கைது செய்யப்பட்டவர்களுக்கு முன் விரோதம் இருந்தது தெரியவந்துள்ளது.