Categories
மாநில செய்திகள்

வெளிமாநில தொழிலாளர்கள் தங்களின் முகாம்களிலேயே தங்கியிருக்க முதல்வர் பழனிச்சாமி வேண்டுகோள்!!

வெளிமாநில தொழிலாளர்கள் தங்களின் முகாம்களிலேயே தங்கியிருக்க முதல்வர் பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” தமிழகத்தில் உள்ள வெளிமாநில தொழிலாளர்கள் சிறப்பு ரயில்கள் மூலம் படிப்படியாக அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர் என அவர் கூறியுள்ளார். மீதமுள்ள வெளிமாநில தொழிலாளர்கள் இன்னும் ஒரு வார காலத்திற்குள் அவரவர் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

எனவே வெளிமாநில தொழிலாளர்கள் முகாம்களிலேயே தங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் இருந்து இதுவரை 8 சிறப்பு ரயில்கள் மூலம் 9,000 வெளிமாநில தொழிலாளர்கள் அவரவர் மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக” அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு நடந்து செல்வதை அனுமதிக்க வேண்டாம் என உள்துறை செயலாளர் அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் அனுப்பியிருந்தார்.

அதில், வெளிமாநில தொழிலாளர்கள் சாலை மற்றும் ரயில் தண்டவாளம் வழியாக நடந்து சொந்த ஊர் செல்வதை அனுமதிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார். நடந்து செல்பவர்கள் மீட்டு முகாம்களில் தங்கவைத்து உணவு, தண்ணீர் வழங்க வேண்டும் என செயலாளர் தெரிவித்துள்ளார். அதேபோல புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பேருந்து அல்லது சிறப்பு ரயில் மூலம் சொந்த ஊர்களுக்கு செல்வதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களை முகாம்களிலேயே தங்கியிருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். முன்னதாக, வெளிமாநில தொழிலாளர்கள் அவர்களின் சொந்த ஊருக்கு செல்லும் கட்டணத்தை அந்தந்த மாநில அரசுகள் ஏற்காவிடில் தமிழக அரசே அதனை ஏற்கும் என அரசாணை வெளியிடப்பட்டிருந்தது குறிப்[பிடத்தக்கது.

Categories

Tech |