அரியலூரில் கோயம்பேடு தொழிலாளர்கள் 32 பேர் உட்பட 36 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஆறுதல் அளிக்கும் வகையில் தினமும் கணிசமான எண்ணிக்கையில் கொரோனா பாதித்த நபர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர். அந்த வகையில் அரியலூர் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த கோயம்பேடு தொழிலாளர்கள் 32 பேர் உட்பட 36 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அரியலூரில் 275 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் இதுவரை 48 பேர் குணமடைந்துள்ளனர். இதேபோல சென்னை எழும்பூர் தாய் செய் நல மருத்துவமனையில் கொரோனா பாதிப்பால் அனுமதிக்கப்பட்டிருந்த 4 கர்ப்பிணி பெண்கள் சிகிச்சைக்கு பின்னர் பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 7,204ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 135 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 1,959ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 27.19% பேர் குணடமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.